கிளிநொச்சி அறிவால் நகர் பகுதியில் இன்று (பிப்ரவரி 20) காலை பஸ் ஒன்றும் கார் ஒன்றும் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.