கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் சிறு காயங்களுக்குள்ளானார். சம்பவ இடத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன.
18 வயதுடைய புளியம்பக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.