கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுது்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று பிற்பகல் கிளிநொச்சி – பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான கதிரவேலு யாதவராசா என்பவர் என தெரியவந்துள்ளது.
பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த படகு ஒன்று புளியம்பொக்கனி பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணித்த குடும்பம் மீது மோதியுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.