Homeஇலங்கைகிறீம்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கிறீம்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Published on

புறக்கோட்டை, கதிரேசன் வீதியில் பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிறீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரை ஏமாற்றி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 50 லட்சம் ரூபாய் சந்தை பெறுமதியான கிறீம்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிறீம் வகைகள் மற்றும் இதர பொருட்களின் பாரியளவிலான பொருட்கள் களஞ்சியசாலை மற்றும் கடையொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, ​​இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரால் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் இருப்பை மேற்படி திணைக்களம் கையகப்படுத்தியது.

அத்துடன், நுகர்வோரை தவறாக வழிநடத்தி சந்தைக்கு வெளியிடும் வைகயில் லேபிள்களை ஒட்டுவதற்கும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.அவை வெளிநாட்டு பொருட்கள் எனவும் அவற்றின் தரம் அறியாமல் யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் பெண்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this