மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் உள்ள கிண்ணியா பொதுச் சந்தைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை (11) தேசிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தலைமையின் கீழ் சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டு, மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.