மீகவத்தையில் பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று (21) கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
12 வயதுடைய பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரிவெனாவில் பிக்கு இல்லாததால் தேடுதலின் போது கிணற்றில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
கிணற்றில் இருந்து மீட்கப்படும் போதும் அவர் உயிரிழந்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.