ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கென்ரி பகுதியில் நேற்று அதிகாலை ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர் அன்ஷுல் ராவத் என்ற ராணுவ வீரர் காயமடைந்தார். இதனையடுத்து, உடனடிருந்த ராணுவ வீரர்கள் காயமடைந்த அந்த வீரரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.