கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகச்சி சந்தையடி பகுதியில் திங்கட்கிழமை (01) கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாயவனுர் சந்தையடியைச் சேர்ந்த 64 வயது உடைய பாலசிங்கம் கிருஸ்னேஸ்வரன் தவம் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
திங்கட்கிழமை பெய்த கடும் மழையின் போது அவர் வீட்டின் அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்தே உயிரிழந்துள்ளார்.இச்சம்பம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.