இந்தியாவில் கிரிக்கெட் எவ்வாறு மதமாகப் பார்க்கப்படுகிறதோ அதுபோல் பிரேசிலிலும் கால்பந்து மதமாக மக்களால் பார்க்கப்படுகிறது.அந்த மதத்தின் கடவுளாக நம்பப்பட்டவர் பீலே. கால்பந்து விளையாடத் தொடங்கும் ஒவ்வொரு வீரரும் பீலேயின் பெயரை உச்சரிக்காமல் தனது கால்களை முன்னே நகர்த்தியதில்லை. அந்த அளவுக்கு கால்பந்து விளையாட்டும், பீலேயும் பிரிக்க முடியாததாக விளங்கினார்கள்.
தனது 82-ஆவது வயதில் பெலே காலமானார். அவருக்கு கால்பந்து நட்சத்திரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெலே தனது நாட்டுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் உட்பட 21 வருட வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பெலேவுக்கு புகழாரம் சூட்டியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “தாழ் நிலையில் இருந்து வந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் எழுச்சி, வேறு எவருடன் ஒப்பிட முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.