Homeஇந்தியாகால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 3 தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெறும்.

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 3 தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெறும்.

Published on

டிஎன்பிஎஸ்சி சார்பில், அடுத்த மாதம் கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 3 தேர்வுகள் நடைபெற உள்ளன. மேலும் குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட்டும் வெளியாகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில், அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணிகள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், மார்ச் மாதம் மட்டும் டிஎன்பிஎஸ்சி சார்பில் 3 தேர்வுகள் நடக்க உள்ளது. அதாவது, மருத்துவ உளவியலாளர் பதவியில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அறிவித்தது. இப்பதவிக்கான கணினி வழி தேர்வு மார்ச் 14 ஆம் தேதி முற்பகல், பிற்காலத்தில் நடக்கிறது.

கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியாக உள்ள 731 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இப்பதவிக்கான கணினி வழி தேர்வு மார்ச் 15 ஆம் தேதி முற்பகல், பிற்காலத்தில் நடக்கிறது. தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய, நிதியாளர் பணியில் 5 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு மார்ச் 10ம் தேதி முற்பகல், பிற்காலத்தில் கணினி வழித்தேர்வு நடக்கிறது.

இதேபோல குரூப்-4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 274 பணியிடம், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 3,593, இளநிலை உதவியாளர்(பிணையம்)-88, வரிதண்டலர் (கிரேடு 1)-50, தட்டச்சர்- 208, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-1,024, பண்டக காப்பாளர் ஒரு பதவி என 7,138 பணியிடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர் 64 இடம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இளநிலை உதவியாளர் 43, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வரிதண்டலர் 49, 7 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியிடம் என 163 இடங்கள் சேர்த்து மொத்தம் 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடந்தது.

இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டது. 18,36,535 பேர் குரூப்-4 தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this