காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
போராட்ட களத்தில் கணிசமான பங்கு வகித்து, முன்னணியில் நின்று போராட்டத்திற்கு பலமாக விளங்கிய அவர், கடிதம் மூலம் தனது கடைசி ஆசையை குறிப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் அவர் இறப்பதற்கு முன் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.புத்தி பிரபோதாவின் திடீர் மரணம் குறித்து அமைச்சர் சனத் நிஷாந்த தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“முதல் போராட்டக்காரர் மரணம்! காலி முகத்திடல் போராட்டத்தை ஆரம்பிப்பதில் முக்கிய பங்காற்றியவரும், கோட்டா கோ கிராமத்தின் ஸ்தாபக உறுப்பினருமான புத்தி பிரபோத கருணாரத்ன (முதல் போராட்டக்காரர்) தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டா கோ கிராமத்தில் முதல் சிறிய குடிசையை கட்டியவர் போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரே புத்தி பிரபோத. புத்தி பிரபோத கருணாரத்ன மே 9 தாக்குதலின் போது நாட்டைப் பற்றவைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
புத்தி பிரபோத கடந்த காலமாக மகிந்தவின் மரணத்திற்காக பிரார்த்தனை செய்தார். மகிந்த இறக்கும் வரை காத்திருந்தார். எனினும், அவர் நீண்டகாலமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
பின்னோக்கிப் பார்த்தால், மனநோயால் பாதிக்கப்பட்ட பலரால் காலி முகத்திடல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் மற்றுமொரு தலைவரான நிர்மணி லியனகே, இதற்கு முன்னர் உயிரிழந்தார். அவர் கோட்டா கோ கமவின் முதலாவது கூடாரம் அமைப்பதற்குப் பங்களிப்புச் செய்தவர்.
மகிந்த ராஜபக்ச இறக்கும் வரை காத்திருந்த புத்தி பிரபோத போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு வருடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டார்.முதல் போராளியான புத்தி பிரபோத கருணாரத்னவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்” என சனத் நிஷாந்த தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.