அரச மானிய நிகழ்ச்சித் திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளது.
அரச மானியம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்டு வாழும் மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகளே வழங்கப்பட்டுள்ளன.
அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பொதியில் 2024.03.25 என காலாவதி திகதி அச்சிடப்பட்டிருக்கிறது. அத்தோடு வழங்கப்பட்ட பொதிகளில் இருந்த அரிசியும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இந்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகளிடம் தொடர்பு கொண்டு வினவியபோது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இன்றைய தினம் குறித்த குடும்பங்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார் .