Homeஇலங்கைகாதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு நேர்ந்த கதி

காதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு நேர்ந்த கதி

Published on

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிபதியின் முன்பாக முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் பக்கத்து வீட்டு யுவதியுடன் காதல் வசப்பட்டுள்ளார் . எனினும், பின்னர் அவரது நடத்தையால் அதிருப்தியடைந்த யுவதி, காதல் உறவை நிறுத்தியுள்ளார்.

எனினும், அந்த இளைஞன் யுவதிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளதுடன், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போதான வழக்கு விசாரணையின் போது எதிராளி சாட்சியமளித்து விட்டு வரும்போது, சந்தேகநபர் நீதவானின் முன்பாக அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதன்போது  இளைஞன் மீது பாலியல் துன்புறுத்தல், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு நீதவான் கட்டளையிட்டதுடன், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும் சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this