காணி உறுதிப்பத்திர பிரதிகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.காணிப் பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள் திணைக்களத்தினால் துறைசார் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கட்டணத் திருத்தம் குறித்த திணைக்களத்தின் யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், காணி உறுதிப்பத்திர பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தினக்கழகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.