அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (06.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.இதன்போது 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பி.சாரங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வயல் நிலத்தைப் பாதுகாக்க வயலில் தங்கச் சென்றவேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.