மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த 6076 புலத்திசி நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயிலில் ஹபரணை, சதரஸ் கோட்டை பகுதியில் காட்டு யானை மோதியுள்ளது.
இதன்காரணமாக புகையிரதம் தடம் புரண்டுள்ளதுடன் மட்டக்களப்பு மார்க்கத்தில் இயங்கும் புகையிரதமும் தடைப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒரு யானை உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு காட்டு யானைகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.