காக்காமுட்டை சிறுவர்கள் விக்னேஷ்,ரமேஷ் இருவரையும் கதாநாயகர்களாக வைத்து எடுக்கப்பட்ட படம் விட்டல் மூவிஸ், புதுவேதம் வரும் அக்டோபா் 13ம் தேதி வெளிவரஇருக்கும் இந்தபடத்தில் இவர்களுடன் இமான்அண்ணாச்சி,சஞ்சனா,வருனிகா,
இந்தபடத்தைப் பற்றி இயக்குநர் ராசாவிக்ரம் கூறியது பெற்றோரை இழந்து அனாதைகளான பலா் புறநகரில் கொட்டப்படும் கழிவுகளைப் பொறுக்கி தங்களின் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் மலைபோல கொட்டப்படும் கழிவுகளை ஒட்டி சிறுகுடில்கள் அமைத்து அங்கேயே வாழ்ந்து வரும், அவர்களின் குடும்பப்பிரச்சனைகள் காதல் போன்றவற்றை குப்பை மேட்டையே கதைக்களமாக்கி இயல்பான சூழலில் சேற்றிலும் சகதியிலும் துர்நாற்றத்திலும் எனது படக்குழுவுடன் சென்று மிகவும் சிரமப்பட்டு படமாக்கினோம் இதுவரை பார்த்திராத வித்தியாசமான படமாகஇது இருக்கும் என்றார். ரபிதேவேந்திரன் இசையில் k.v.ராஜன் ஒளிப்பதிவுசெய்துள்ளார் மஞ்சுநாத்புகழ் இனைதயாரிப்பாளராகப் பனியாற்ற, எழுதி இயக்கியுள்ளார் ராசாவிக்ரம்