கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி தற்போது காலிமுகத்திடலை அடைந்துள்ளது.
இந்த நிலையில் காலிமுகத்திடல் வீதியூடான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடலில் போராட்டம் இன்று 20ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.