நேற்றிரவு களுத்துறை – மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.