காலை 7:00 மணியளவில் களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணிக்க வேண்டிய விரைவு ரயில் களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்குள் நுழையும் போது தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலின் பதினொன்றாவது பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதாகவும், இதனால் 11 ஸ்லீப்பர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, கடலோரப் பாதையில் இயக்கப்படும் மற்ற ரயில்கள் தாமதமாகலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.