களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு (07) அம் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அம் மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் 22 வயதுடைய மாணவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் அகில இந்திரசேன என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.