இன்று ஆரம்பிக்கப்பட இருந்து, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், சில நாட்களுக்கு பிற்போவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் நிலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், சில நாட்களுக்கு பிற்போகக்கூடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல என்பதால், சில ஆசிரியர்கள் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.