Homeஇலங்கைகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள் முதல் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள் முதல் ஆரம்பம்

Published on

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று தெரிவித்தார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீடு செய்யும் செயற்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் மேலும் மத்திய நிலையங்களை உருவாக்கி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட தாம் தயாரென, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

இதன்படி, உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு சபை நேற்று முன்தினம் (04) பிற்பகல் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிக்கும் எந்த நேரத்திலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக, பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்த எதிர்பார்த்துள்ள கலந்துரையாடலை அடுத்த வாரம் ஒழுங்கு செய்யவுள்ளதாக, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் இதனை அறிவித்திருந்தது.

உழைக்கும் போதே வரி செலுத்தும் திட்டத்தை தளர்த்துமாறும் அல்லது அதற்கு ஈடான நிவாரணம் வழங்குமாறும் கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக உயர்தர விடைத்தாள் மதிப்பீடு செய்யும் செயற்பாடுகள் சுமார் இரண்டரை மாதங்கள் தாமதமாகின. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this