செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி; 67 வயது சந்தேகநபர் கைது.

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி; 67 வயது சந்தேகநபர் கைது.

Published on

spot_img
spot_img

கலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள கலிபோர்னியா கடலோர விவசாய பண்ணை துப்பாக்கிச் சூட்டில் 4 பேரும் அங்கிருந்து 48 கிலோமீட்டர் ஆப் மூன் பே நகரத்திற்கு வெளியே 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் சந்தேகத்திற்குரிய நபரான 67 வயதான சாவோ சுன்லி (Zhao Chunli) என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்தே, பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

விவசாய பண்ணையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் நான்கு பேர் இறந்த நிலையிலும் ஐந்தாவது நபர் காயமடைந்தும், மற்றொரு இடத்தில் மூன்று பேர் இறந்த நிலையிலும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் அனைவரும் சீன-அமெரிக்க பண்ணை தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த வாரம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

16 வயதுத் தாய், 10 மாத மகன் மற்றும் அந்தக் குழந்தையின் பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

போதைக் கடத்தலுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்திலேயே குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, ஆசிய அமெரிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் லொஸ் ஏஞ்சல்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்வே ஒழுங்கையில் இருக்கும் பொல்ரூம் நடன விடுதி ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதில் 72 வயது ஹூ கேன் என்பவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி இருப்பதாகவும் பொலிஸார் அவரை நெருங்கியபோது தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்ததாக கலிபோர்னிய கௌண்டி சரிப் ரொபர்ட் லூனா தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டு ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் அதிர்ச்சியூட்டும் பாரிய படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களுக்குள் 39 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this