பொதுவாக திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என்கின்ற நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன. மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை.
இருப்பினும் பெரும்பாலானோர் கறுப்பு நிற திராட்சையையே அதிகம் விரும்பி சாப்பிடுவர். இதற்கு அதன் சுவையே முக்கிய காரணம்.
இந்த கறுப்பு நிற திராட்சையை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
தற்போது ஒரு கையளவு கறுப்புத் திராட்சை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
கறுப்புத் திராட்சை பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். இதில் அதிக அளவு கல்சியம் உள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கறுப்புத் திராட்சையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, அதிக அளவு Vitamin C உள்ளது. இது உடலில் உள்ள தாதுக்களை விரைவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
கறுப்புத் திராட்சையை உட்கொள்வது, பொட்டாசியம் இரத்தத்தில் சோடியத்தை குறைக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
ஒரு கையளவு திராட்சையைத் தொடர்ந்து சாப்பிடுவது இரத்த சோகை அறிகுறிகளைத் தடுக்கலாம்.
கறுப்புத் திராட்சை இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சில கறுப்பு திராட்சைகளை உட்கொள்வது சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கறுப்புத் திராட்சை உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். திராட்சையை சாப்பிடுவது பல் சிதைவில் இருந்து உங்களை பாதுகாக்கும்.