Homeஇந்தியாகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

Published on

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதேபோல காவிரியின் முக்கிய துணை நதியான கபிலா உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனிடையே கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 17,776 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 13,341 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,841 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,500 கனஅடியாக உள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 17,631 கனஅடியாக இருந்த நிலையில் குறைக்கப்பட்டிருக்கிறது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this