கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட குற்றவாளியை கிராம மக்கள் தாக்க முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
குற்றவாளி பிரவீனை காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குற்றவாளிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பின.பின்னர் குற்றவாளி பிரவீனை வெளியே அழைத்து வந்தபோது கிராம மக்கள் ஆக்ரோஷமாக அவரை தாக்க முயற்சி செய்தனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தி அங்கு கூடியிருந்தவர்களை விரட்டினர். இதனிடையே விசாரணையின் போது பிரவீனின் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.