கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிகமவில் ரயிலொன்று இயந்திரக் கோளாறு காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் செயலிழந்துள்ளது.
இதனால் றுகுணு குமாரி மற்றும் காலு குமாரி ஆகிய ரயில் சேவைகள் தாமதமடையும் என ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.