கம்பளை, எத்கல பிரதேசத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆண் நபர் மற்றும் நாயின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த எத்கல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வனப்பகுதிக்கு மேலே உள்ள காணியில் சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
உயிரிழந்த நபர் அந்த காட்டுப் பகுதிக்கு சென்றதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அந்த பகுதிக்கு சென்றதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த நபரின் சடலத்திற்கு அருகில் நாயும் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.