செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகம்பளையில் கொலை செய்யப்பட்ட 22 வயது யுவதி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கம்பளையில் கொலை செய்யப்பட்ட 22 வயது யுவதி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Published on

spot_img
spot_img

கம்பளை – வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட பாத்திமா முனவ்வராவை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் நேற்று (25.05.2023) முன்னிலைப்படுத்திய போதே கம்பளை பதில் நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

மௌனப் போராட்டத்தில் மக்கள் குறித்த வழக்கு விசாரணையின் போது, கடுமையான தண்டனை வழங்குமாறு கோரி கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய சேர்ந்த பிரதேச மக்கள் மற்றும் கம்பளை மக்களும் ஒன்றினைந்து கம்பளை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் அஹமட் என்ற சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கம்பளையில் கடந்த (7.05.2023)ஆம் திகதி காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வரா 6 நாட்களுக்கு பிறகு (13.05.2023)ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

யுவதி காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் (12.05.2023) கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, அவ்வழியாக வேலைக்கு சென்ற யுவதியிடம் சந்தேகநபர் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தநிலையில், யுவதி அதற்கு மறுப்பு தெரிவித்தமையால் சந்தேக நபர் யுவதியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று யுவதியை அங்கேயே கொலை செய்து, கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this