யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் தங்கியிருந்த கனேடிய பிரஜை வீட்டில் நுழைந்து பெருந்தொகை பணங்களை கொள்ளையிட்டது மட்டுமல்லாமல் கனடா பிரஜையை சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.
கனடாவில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதிக்கு வந்து வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தவர்கள் அயலில் உள்ள பாடசாலையில் கற்ப்பிக்கும் இரு ஆசிரியர்கள் உட்பட கனடா பிரஜையும் அவரது மனைவியும் வீட்டில் தங்கியிருந்த வேளை வீட்டிற்குள் நள்ளிரவு 12 மணியளவில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கதவினை உடைத்து நான்கு பேர் அடங்கிய குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்த குழு ஒன்று ஆசிரியர்களை கட்டி வைத்து விட்டு கனடா பிரஜை மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதுடன் வீட்டில் சோதனை மேற்கொண்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் கனேடிய டொலர், ஆயிரம் அமெரிக்க டொலருடன் இலங்கை நாணயம் மற்றும் கடவுச் சீட்டையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான கனேடிய பிரஜை படகு மூலம் அதிகாலை ஊர்காவற்றுறை கொண்டு வந்து அதிகாலை இரண்டு மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது மேலும் குறித்த கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவம் குறித்து பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது