அமெரிக்கா , கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட் செலவையும்
பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்துத் பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் “ஸ்டெ ம்” (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வார்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்வர்கள்.
இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவரமையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், “ஆட் ஜாப்ஸ்” (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
By: Pirathee