கனடாவின் டொராண்டோவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ் பிரஜைகள் உட்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி யோகராஜா, 29 வயதான மிலோஷா ஆரியரத்தினம் மற்றும் 32 வயதான கஜன் யோகநாயகம் ஆகியோர் இந்த 7 தமிழ் பிரஜைகளில் அடங்குவர்.
வாகன திருட்டு தொடர்பாக ரொறொன்ரோ பொலிஸாரின் விசாரணையில் இந்த 4 தமிழர்களே உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணம், பல சொகுசு வாகனங்கள் மற்றும் $1.5 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், சர்வீஸ் ஒன்ராறியோ ஊழியர்களுடன் இணைந்து வாகன திருட்டுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.