கனடாவில் காட்டுத்தீ காரணமாக 165000 சதுர கிலோமீட்டர் பரப்பு தீக்கிரையாகியுள்ளது.இந்த ஆண்டில் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற காட்டுத்தீ சம்பவங்களினால் இவ்வாறு அழிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 6174 இடங்களில் காட்டுத்தீ பரவியதாகவும் இதில் தற்பொழுது சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவுகை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நிலவி வரும் காட்டுத்தீ பரவுகைகளில் சுமார் 800 இடங்கள் கட்டுக்கு அடங்காதவை என தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீ காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டது எனவும் பெரும் எண்ணிக்கையிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட சொத்து நஷ்டங்கள் தொடர்பில் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.இந்த செப்டம்பர் மாதத்திலும் காட்டுத்தீ பரவுகை தொடர்ந்தும் நீடிக்கும் என கனடிய இயற்கை வள முகவர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பல இடங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.