கண்டி – மஹியங்கனை 18 வளைவு வீதியில் பாறைகள் மற்றும் மேடுகள் சரிந்து விழுந்ததன் காரணமாக நேற்று (4) முற்றாக மூடப்பட்டிருந்த வீதியின் ஒரு பாதை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையில் மண் சரிந்து வீழ்ந்தமையினால் வீதியின் பகுதி முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை ஆய்வு செய்த பின்னர், விழுந்த மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு வீதியின் ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது. .
வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தற்போது வீதியின் மற்றைய பகுதியினை சீர் செய்து வழமையான போக்குவரத்திற்காக திறந்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.