கண்டியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலையின் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி நேற்று (மே 09) காலை 11.30 மணியளவில் பாடசாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கிட்டத்தட்ட 15 அடி உயரத்திற்கு குதித்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை அதிபர் சபையில் அங்கம் வகிக்கும் மாணவர், கட்டுகஸ்தோட்டை களுகமுவ வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.