கண்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை பாடசாலையின் பந்தலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த 26 வயதுடைய இளைஞனின் சடலம் பாடசாலை மாணவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலியானவர் தும்மோதர பகுதியைச் சேர்ந்தவர்.
தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றினால் பாடசாலையின் பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணத்தை கண்டறிய கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.