யாழில் கணவன் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
யாழ் குருநகர் மூன்றாம் குறுக்குத் தெருவில் வசிக்கும் 61 வயதான ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று குறித்த பெண்ணின் கணவர் மாரடைப்பு ஏற்றப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த செய்தியை அறிந்த மனைவி தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார் எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.