சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி ஐயனார் கோவிலடிப் பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு இலக்கான இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தினத்தன்று கணவன் மனைவியை மோசமாக தாக்கியதோடு, அயலவர்களின் உதவியோடு மனைவி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டிருந்த நிலையில் இன்று (16) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் நாவற்குழி ஐயனார் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜமுனா என்ற 7 மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளின் தாயாராவார்.
இந்நிலையில் மரணத்திற்கு காரணமான 25 வயதான கணவனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.