கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்கவில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்காக சென்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையைச் சோந்த 49 வயதான குறித்த நபரின் பயணபொதியை விமான நிலைய சோதனைச் சாவடியில் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனைச் செய்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரை கைது செய்ததன் மூலம் கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.