கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண்கள் 6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டாளர் பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்களின் கணக்கில் பணம் வைத்துள்ளதுடன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் சந்தேக நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.