சமீபத்திய கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சலுகைகள் மற்றும் மத ஸ்தலங்கள், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி கூரை அமைப்புகளை வழங்கவும் அரச தலைவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.