மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் பகுதிகள்:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஜனவரி 31-ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கடற்கரையை சென்றடையும்.
காற்றின் வேகமானது மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசுவதுடன் (பூமத்திய ரேகை – 05 N) மற்றும் (85E – 95E) இடைப்பட்ட கடற்பரப்புகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் மிகவும் கொந்தளிப்பான அல்லது கொந்தளிப்பான கடல்கள் எதிர்பார்க்கப்படலாம்.
எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மேற்குறிப்பிட்ட கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும்.
காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ. கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவுக்கு காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.