அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விற்பனை கடந்த 13 மாதங்களில் குறைந்துள்ளது.
கடந்த 13 மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விற்பனை தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, பெற்றோல் மற்றும் டீசல் இரண்டின் பாவனையிலும் பாரிய குறைப்பு ஏற்பட்டுள்ளது.
CPC இன் படி, லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 50%, பெற்றோல் விற்பனை 30% மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை 70% குறைந்துள்ளது.