(6/1/23) பேலியகொடையில் உள்ள சுங்க களஞ்சியசாலையில் வெள்ளை சீனி என கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
1200 மெற்றிக் தொன் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதாக சுங்கத்தை தவறாக வழிநடத்தி 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிவப்பு சீனி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பிற்பகல் களஞ்சியசாலையில் சீனி இருப்புக்களை பார்வையிட்டார்.