Homeஇலங்கைகஞ்சா கடத்தலை மடக்கி பிடித்த இளைஞர்கள்

கஞ்சா கடத்தலை மடக்கி பிடித்த இளைஞர்கள்

Published on

யாழ்ப்பாணம் பொன்னாலையூடாக கடத்தப்பட்ட சுமார் 350 தொடக்கம் 400 கிலோகிராம் வரையான கஞ்சா பொன்னாலை இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டது.

கஞ்சா கடத்தியவர்களில் ஒருவரும் பிடிக்கப்பட்டார். ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.பிடிபட்டவர் பண்டாரவளையை சேர்ந்தவர் எனவும் பண்டத்தரிப்பு – மாதகல் பிரதேசத்தில் திருமணம் செய்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்தார்.

பொன்னாலை பரவைக்கடல் ஊடாக கடத்திவரப்பட்ட கஞ்சா, பொன்னாலைச் சந்திக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கும் இடையில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றப்பட்டபோதே சிக்கியது.

குறித்த வாகனத்தின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த இளைஞர்கள் அதை சோதனையிட முற்பட்டபோதே கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினரிடம் வாகனத்துடன் கஞ்சாவும் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட நபரும் கையளிக்கப்பட்டார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this