Homeசினிமாஓடிடி தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் 'துணிவு'

ஓடிடி தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் ‘துணிவு’

Published on

அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 இடத்தில் இருக்கும் படங்கள் பட்டியலில் ‘துணிவு’ திரைப்படம் மூன்று இடங்களை பிடித்துள்ளது. அதாவது, ‘துணிவு’ திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷன் முதலிடத்தையும் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், நான் இங்கிலீஸ் (non english) பிரிவில் முதல் ஐந்து இடத்தில் இரண்டு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this