Homeஇலங்கைஒஸ்மானியாக் கல்லூரி மோதல் விவகாரம்! பொலிஸ் நடவடிக்கைக்கு உட்படுத்த தீர்மானம்

ஒஸ்மானியாக் கல்லூரி மோதல் விவகாரம்! பொலிஸ் நடவடிக்கைக்கு உட்படுத்த தீர்மானம்

Published on

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் கடந்த 24ஆம் திகதி  பயிற்சி ஆசிரியரை மாணவர் தாக்கிய விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திற்கும் – யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஆசிரியர் மற்றும் பாடசாலை இரு தரப்பினரையும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும், வலயக்கல்வி அலுவலகத்தினால் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திற்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும், மேற்படி பொலீஸார் மற்றும் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் இணைந்து உரிய சட்ட விசாரணைகளை முன்னெடுத்து முறையான தீர்மானம் ஒன்றை நீதிமன்றிற்கு ஊடாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் மோதலுடன் தொடர்புடைய பயிற்சி ஆசிரியர் அவர் தரப்பிலும், பாடசாலை சார்பில் அதிபர் தரப்பிலும் பொலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதே நேரம் ஆசிரியர்களிலும் ஒரு சிலர் தமது சொந்த விருப்பத்தில் இடமாற்றத்தை கோரி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. இது குறித்து தான் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

மேலும் ஆசிரியர்கள் தொடர்பான ஒரு சில விவகாரங்கள் தொடர்பிலும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தது. இது தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்பாளர்  குறிப்பிட்டார்.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this