வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் வவுனியா குட்செட் வீதி அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம் பெற்றுள்ளது.
தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் தாய் மற்றும் பிள்ளைகளும் படுக்கையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர் இந் நிலையில் இவர்களின் திடீர் உயிரிழப்பிற்கான காரணம் தெரியாத நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.