எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் வீடொன்றில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துசித சம்பத் பண்டார என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.காலி பிரதேசத்தில் பணிபுரியும் இடத்திலிருந்து எப்பாவல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் உயிரை மாய்த்துள்ளார்.
தனது சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை உயிரிழந்த இளைஞனின் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி குடும்பத்தில் ஐந்தாவது நபராக இந்த இளைஞன் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.சில வருடங்களுக்கு முன்னர் அவரது சகோதரன் மற்றும் சகோதரி ஒருவர் தலாவ பிரதேசத்தில் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாகவும்
மற்றுமொரு சகோதரன் தோட்டத்திலுள்ள மரத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாகவும் பொலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்ட அதே அறையில் அவரது மற்றொரு சகோதரரும் முன்னதாக உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
அதன்படி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏழு சகோதர சகோதரிகளில் ஐந்து பேர் இவ்வாறு தவறான முடிவுகள் எடுத்து உயிரிழந்துள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.